NARENU KALAN
காளான் என்பது ஒரு பூசணமாகும். இது பச்சையமில்லாத தாவரம். மழைக்காலம் ஆரம்பமாகும் போது வயல்களில்,மரங்களில் பல்வேறு விதமான காளான்கள் குடையின் தோற்றத்தில் முளைப்பதை பார்த்திருக்கிறோம், ஏறத்தாழ 30000 வகை காளான்கள் உண்டு. ரிக் வேதத்தில் காளான் பற்றிய குறிப்புகள் உள்ளது.
புராணங்களில் குறிப்பிட்டுள்ள சோம பானம் என்பது அமானிடா மஸ்காரியா என்ற காளானின் சாறு என்று அறியப்பட்டது. சில காளான்கள் போதை தரக்கூடியது. சில காளான்கள் நச்சு தன்மையுள்ளது. அனைத்து காளான்களையும் உணவாக பயன்படுத்த இயலாது. சீன இலக்கியங்களிலும் கிறிஸ்து பிறப்பதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பே காளான் பற்றிய குறிப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
பழங்காலத்தில் போரில் காயமடைந்த வீரர்களுக்கு வலிமையூட்டுவதற்கு காளான் பயன்படுத்தப்பட்டது. சோமானியர்கள் விழாக்களில் காளானின் சாற்றை உண்டு மகிழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளது. கம்பராமாயணம் மகாபாரதம் ஆகிய இலக்கியங்களில் காளான் பற்றிய குறிப்புகள் அதிகமாக உள்ளது.
உண்ண கூடிய காளான் வகைகளை சோதனை செய்ததில் எய்ட்ஸ்/புற்று நோய் போன்ற கொடுமையான நோய்களை குணப்படுத்த கூடிய வல்லமை இதற்கு உண்டு. உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நோய் வருவதை முன்னரே தடுக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. உலக அளவில் புரதச் சத்து குறைபாடு மிகப் பெரிய சவாலாக உள்ளது. அதனை சரி செய்யும் காரணியாக காளான் உள்ளது. காளான் எல்லா வயதினருக்கும் ஏற்ற ஒரு பாதுகாப்பான உணவாகும்.
ஐரோப்பிய நாடுகளிள் மக்கள் காளானை தங்கள் உணவில் அதிகம் சேர்த்து கொள்கின்றனர். மற்ற நாடுகளில் காளானை உணவாக பயன்படுத்துவது குறைவாகவே உள்ளது. இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 40 கிராம் அளவே காளானை உணவாக உட்கொள்கின்றனர்.
நம் நாட்டில் பெருமளவு விவசாய பூமியாக விளங்குகின்றது. காளானை உற்பத்தி செய்ய தேவையான மூலபொருளும் எளிமையாக கிடைக்க பல வழிகள் உள்ளது. கால நிலையும் சரியாக உள்ளது. தற்போது சந்தையில் காளான்களுக்கு நல்ல வரவேற்புள்ளது மற்றும் விலையும் உள்ளது. அப்படி இருந்தும் காளானை உற்பத்தி செய்ய தயங்குவது ஏன்?
ஏன் எனில் இதற்கு தேவையான தரமான விதை வெளிச் சந்தையில் கிடைப்பதில்லை. சத்துக்கள் அற்ற தரமற்ற விதை கிடைப்பதால் விளைச்சல் கிடைக்காமல் காளான் பண்ணைகள் ஆரம்பித்த சில மாதங்களிலேயே இதை கைவிட வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
இதற்கு வழி என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் விதை உற்பத்தி பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமலேயே தொழில் தொடங்குவது தான் மிக முக்கிய காரணமாக உள்ளது.
ஒரு தொழிலை தேர்ந்தெடுக்கும் போது எல்லா காரணிகளையும் ஆராய்ந்து பல இடங்களில் நேரடி பயிற்ச்சிகளையும் எடுத்து கொண்டு விதை உற்பத்தியையும் நாமே மேற்கொள்ளும் முடிவோடு காளான் பண்னைகளை உருவாக்கினால் காளானில் நாம் சாதிப்பது உறுதியே.
விதை ஆய்வகத்தில் மட்டுமே தயாரிக்க கூடிய சூழலில் உள்ளது. அப்படி தயாரிக்கப்படும் விதை மற்ற காய்கறி விதைகளை போல் பல நாட்கள் பாதுகாத்து பிறகு விற்பனை செய்ய முடிவதில்லை. ஒவ்வொரு நாளும் விதை புட்டியில் உள்ள பூஞ்சான்கள் வளருவதால் ஒன்றிரண்டு மாதத்திற்குள் அதை உபயோகிக்க வேண்டிய கட்டாயம், உபயோகிக்க தவறினால் நாள்பட்ட விதையாகி விளைச்சல் பாதிக்கும்.
லட்சகணக்கான மக்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தவும் நாளைய தலைமுறைக்கு ரசாயனப் பொருட்களின் உபயோகமில்லாமலும் உற்பத்தி செய்கின்ற சக்தி மிக்க ஊட்டசத்து மிகுதியான உணவு கொடுக்க நம்மால் முடியும்.
பட்டன் காளான்:
அனைத்து பகிதியிலும் இந்த வகை காளானை உணவுக்கு வருவதை நாம் காண்கிறோம். இதை உற்பத்தி செய்ய செலவு அதிகம் குறைவான வெப்பம் தேவை. இப்படிபட்ட கால நிலை வருட முழுவதும் நம் நாட்டில் சில பகுதியில் மட்டுமே கிடைக்கிறது. குளிர் பிரதேசத்தில் மட்டுமே இவ்வகை காளான் வளர்க்க இயலும். வெப்ப மண்டல பிரதேசங்களில் இவை வளர வேண்டுமெனில் குளிரூட்ட பட்ட கட்டிடங்களை கட்டி அதனுள் காளானை வளர செய்ய வேண்டும்.
தற்போது மின்சார பற்றாக்குறையும் மின் கட்டண உயர்வு அதிகம் உள்ள நம் தமிழ் நாட்டில் இதற்கு முதலீடு கோடி கணக்கில் தேவைப்படும் காரணத்தால் இது சாதாரண விவசாயினால் நினைத்து பார்க்க முடியாது. உற்பத்தி செய்த காளானை உடனடியாக விற்பனைக்கு எடுத்து செல்ல வேண்டும். நாள் பட்டால் காளான் கெட்டு விடும். அதற்காக உப்பு மற்றும் சிட்ரிக் அமில கரைசலில் கானிங் செய்து வருடம் முழுவதும் அழியாமல் பாதுகாத்து ஏற்றுமதி செய்கிறார்கள். கானிங் செய்யும் முறையிலும் செலவு கூடுதல் ஆகும். ஆதலால் இம்முறை சாதாரண விவசாயிக்கு உகந்தது அல்ல.
சிற்பி காளான்:
முத்து சிற்பி போன்ற வடிவத்தை பெற்றிருப்பதால் இக்காளானை சிற்பி காளான் என்கிறோம். இவ்வகை காளான்கள் 20c முதல் 30c வெப்ப நிலையில் நன்கு வளரும்.
இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் இக்காளானை வளர்ப்பதற்கு ஏற்றதாக உள்ளன. இக்காளானை வளர்ப்பதற்கு ஏற்றதாக உள்ளன. இக்காளானை உற்பத்தி செய்ய 40 to 50 நாட்கள் ஆகும். முதல் அறுவடை 20-25 நாட்களிலும் இரண்டாம் மூன்றாம் அறுவடை 35-40, 55-60 நாட்களிலும் கிடைக்கும்
காளான் விதை தயாரிப்பு முறைகள்:
விதை தயாரிப்பு நான்கு கட்டங்களாக நடை பெறுகிறது. முதலில்,
1. மூல வித்து தயாரிப்பு
2. தாய் வித்து தயாரிப்பு
3. படுக்கை வித்து முதல் தலை முறை
4. படுக்கை வித்து இரண்டாம் தலை முறை
மூல வித்து:
மூல வித்து தயாரிக்க தேவையானவை
1. உருளை கிழங்கு
2. கடற்பாசி ( Agar Agar)
3. குளுக்கோஸ் (Dex tyoser)
4. தண்ணீர் –
- உருளை கிழங்கு நன்கு திரண்டதாக இருத்தல் வேண்டும் (250 கிராம்)
- தண்ணீரில் மண் போக நன்கு கழுவவும்
- தோல் நீக்கி சிறு சிறு துண்டாக்கவும்.
- 500ml தண்ணீரில் வேக வைக்கவும்.
- பாதி வெந்தவுடன் உருளை கிழங்கு நீரை வடிகட்டி எடுத்து வைத்து விடவும்.( உருளை கிழங்கு சாப்பிட உகந்தது அல்ல தண்ணீர் மட்டும் தேவை)
- 250ml நீரில் கடற்பாசியும் மற்றொரு பத்திரத்தில் 250ml நீரில் குளுக்கோஸ் கலக்கவும்.
- இரண்டையும் கலந்து காய்ச்சவும். பதம் வந்தவுடன் உருளை கிழங்கு நீரையும் சேர்க்கவும்.
- நன்கு பதம் வந்தவுடன் சோதனை குழாய்களில் ஊற்றவும். ஈரம் உறுஞ்சா பஞ்சினால் அடைக்கவும்.
- 7 சோதனை குழாய்களை ஒன்றாக கட்டி குக்கரில் வைக்கவும்.
- 5 சவுண்ட் வந்தவுடன் 20 நிமிடம் சிம்மில் வைத்து பாதுகாப்புடன் வைக்கவும்.
- சோதனை குழாய்களை சாய்வாக pvc குழாய்கள் மீது வைக்கவும்.
- மூன்று நாட்களுக்கு பிறகு திசு வளர்ப்பு அறையில் வைக்கவும் (Dark Room)
- UV Lamp (புற ஊதா கதிர்) ல் 20 நிமிடம் தொற்று நீக்கம் செய்யவும்.
திசு வளர்ப்பு அறை ( Dark Room)
திசு வள்ர்ப்பு அறையின் நீளம் அகலம் உயரம் 6x6x8 அடி என்ற அளவில் இருக்க வேண்டும். முன் புறம் சிறிய கதவு அமைத்தல் வேண்டும். திசு வளர்க்க மற்றும் வித்துகளை வைக்க ஒரு மர மேஜை உள்ளே அமைக்க வேண்டும். உள்ளே புற ஊதா கதிர் விளக்கும் சாதாரண விளக்கும் அமைக்க வேண்டும், கேஸ் உடன் புன் சன் விளக்கை இணைத்து பயன்படுத்த வேண்டும்.
இதற்கு பதிலாக விதை தயாரிக்கும் இடங்களில் அடுக்கு காற்று ஓட்ட அறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு அதிகமான முதலீடு தேவைபடும்.
திசு வளர்க்கும் முறை
- தொற்று நீக்கம் செய்த சோதனை குழாய்களில் காளானின் திசுவை எடுத்து வைக்க வேண்டும். நான்கு(4 ½ ) நாட்களில் பூசணம் பரவுவதை காணலாம்.
- 10 to 15 நாட்களில் பூசணம் முழுவதும் பரவிரும்.
குறிப்பு: திசு வளர்க்க பயன்படுத்த படும் காளான் புதிதாக இருக்க வேண்டும். காளானின் வெளிபுறத்தை எரிசாராயத்தால் தோய்தெடுத்த பஞ்சினால் துடைக்க வேண்டும். தேர்ந்தெடுக்கபட்ட காளானை நீளவாக்கில் துண்டாக்கவும். தலை மற்றும் தண்டு பகுதிக்கு நடுவில் உள்ள கழுத்து பகுதியை பிளேடு கொண்டு துண்டாக்கி இடுக்கி மூலம் எடுத்து சோதனை குழாயை தீயில் காட்டி சோதனை குழாயின் உள்ளே திசுவை வைத்து வாய் பகுதியை பஞ்சினால் மூடி விட வேண்டும்.
இவ்வாறு மூல வித்து உருவாகிறது.
தாய் வித்து தயாரிப்பு:
- வெள்ளை சோளத்தை எடுத்து வேக வைக்கவும்.
- பாதி வெந்தவுடன் எடுத்து கித்தானில் கொட்டி பரவ விடவும் (நிழல் உணர்த்தியாக)
- 5 to 6 மணி நேரத்திற்கு பின் ( 4 கிலோ சோளத்திற்கு 30 கிராம் சுண்ணாம்பு தூள்) கலந்து பேக் செய்யவும்)
- சோளம் பேக்கை 2 மணி நேரம் வேக வைத்து தொற்று நீக்கம் செய்யவும்.
- சோளம் பேக்கை ஆற விடவும். 8 மணி நேரத்திற்கு பின் திசு வளர்ப்பு அறையில் (Dark Room ல்) புற ஊதா கதிரில் (UV Lamp) 20 நிமிடம் தொற்று நீக்கம் செய்யவும்.
- மூல வித்துவை எடுத்து சோளம் பேக்கில் போடவும். நன்கு குழுக்கி விடவும். 10 லிருந்து 15 நாட்களில் பூசணம் பரவும். இது தாய்வித்து எனப்படும்.
முதல் தலைமுறை
சோளத்தை தாய் வித்திற்கு தயாரித்த முறையிலேயே தயாரிக்க வேண்டும். UV Lamp ல் தொற்று நீக்கம் செய்த வரை அதே முறையை பயன்படுத்த வேண்டும் (மூல வித்துவை போட்டதிற்கு பதில் இப்போது தாய் வித்துவை இதில் போடுகின்றோம்) இது முதல் தலைமுறை எனப்படும். (10 to 15 நாட்களில் பூசணம் பரவும்)
இரண்டாம் தலைமுறை
சோளம் பேக் UV Lamp ல் வைத்த முறைபோன்றே இதையும் தயாரிக்க முதல் தலைமுறை வித்துவை சோளம் பேக்கில் இட்டால் இரண்டாம் தலைமுறை வித்து உருவாகும்.
திசு வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை
- Dark Room சுத்தமாக வைக்க வேண்டும்.
- கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்க.
- நோய் தாக்காத புத்தம் புதிய காளானை திசுவிற்கு பயன்படுத்த வேண்டும்..
- வித்து தாயாரிக்க சோளம் தரமானதும் நோய் தாக்காத வாறும் இருக்க வேண்டும்
- சோளம் அரை வேக்காடாக மட்டும் வேக வைக்க வேண்டும்.
- எல்லா செயல்களையும் நேரம் கணக்கிட வேண்டும்.
- தாய் வித்திலிருந்து இரண்டு தலைமுறைக்கு மேல் வித்து பெருக்கம் மேற் கொள்ள கூடாது.
- வித்து பையில் காளான் இரகம் தேதி குறிப்பிட வேண்டும்.
- வித்து ஒரு மாததில் பயன்படுத்த வேண்டும்.
- பொட்டாசியம் பர்மாக்கனெட் மற்றும் பார்மலின் 1:2 என்ற விகிதத்தில் கலந்து புகையூட்டம் ஏற்படுத்தினால் வேற்று பூசணம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
காளான் மருத்துவ பயன்கள்:
- காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
- இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் நன்கு பலப்படும்.
- காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணி.
- பெண்களுக்கு கருப்பை நோய்களை குணப்படுத்துகிறது.
- தினமும் காளான் சூப் அருந்துவதால் மார்பக புற்று நோய் தடுக்கப்படுகிறது.
- 100 கிராம் காளானில் 35% புரதச்சத்து உள்ளது. குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு ஏற்றது.
- மலச்சிக்கலை தீர்க்கும் தன்மை கொண்டது.
- காளானை முட்டைகோஸ் பச்சை பட்டாணியுடன் சேர்த்து சமைத்தால் வயிற்றுபுண் ஆசனப்புண் குணமாகும்.
Farm Located at Nerinjipettai, Mettur.
நேரடியாக பண்ணையை பர்வையிடலாம். பயிற்சிகட்டணம் :ரூ 1500 (பயிற்சி சான்றிதழுடன் ) நீங்கள் வீடியோ மூலம் காளான் வளர்ப்பை புரிந்துகொண்டால் நாங்கள் கொரியர் மூலமாகவும் காளான் விதைகளை அனுபிவைகின்றோம்
1 கிலோ விலை ரூ 110 மட்டுமே. (10 கிலோ ) சோதனைக்காக 1 கிலோ விலை ரூ 200. (sample for test)
(12-24 இன்ச் காளான் பாலிதீன் பைகள் 5 சேர்த்து அனுப்படும் ) ஒரு கிலோ (3 குடுவைகள்) - 3 முதல் 4 காளான் பைகள் செய்யலாம் . இதன் மூலம் 4 கிலோ முதல் 5 கிலோ காளானை பெறலாம்
CONTACT NO : 9944751741, 7598251741, 8508650712, 9659012046
Sir. I am interested I am calling but not response 8754248946
ReplyDeleteSir actually what's your place name
ReplyDeleteBecause am virdhachallam i interest to start this mushroom plantation i know how to grow up the mushroom but here the seeds are not available
காளான் விதைகள் தரமானதாக கிடைக்கும் 9445807120
ReplyDeleteகாளான் விதை வேண்டும்
Delete9629086407
ReplyDeleteUnga account number anuppunga watsapp la
எனக்கு காளான் விதைகள் தேவை. நான் உங்களை தொடர்பு கொள்கிறேன்
ReplyDeleteப்ளீஸ் சென்ட் யுவர் காண்டாக்ட் டீடெயில்ஸ்
ReplyDeleteஎனக்கு வேண்டும் காளான் வித்து
ReplyDeleteNeed seeds
ReplyDeleteஉங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி
ReplyDeleteI'm Sri lanka
What is making money from betting online - Work of Tomake
ReplyDelete1.1.2.3 - Online football betting. How do you know what makes you betting online is the most basic and 1xbet secure way to งานออนไลน์ bet on sports. deccasino